சென்னையில் 8 மாத கர்ப்பமான ஐடிஐ மாணவி மாடியிலிருந்து குதித்து உயிரிழப்புக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டி ஐடிஐ மாணவி காதலித்து கர்ப்பமானதால் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழப்புக்கு முயன்றுள்ளார். இதனால் 8 மாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவி கிண்டியில் உள்ள ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக எட்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து உயிரிழப்புக்கு முயன்றுள்ளார். இதனால் சம்பவ இடத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இறந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தையை கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








