கேன் விழாவின் விருது ஆஸ்கரை விட பெருசு!

உலகப்புகழ் பெற்ற கேன் திரைப்பட விழா( cannes-ஐ கேன் என்றே உச்சரிக்க வேண்டுமாம்) பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன் நகரத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் இந்த விழாவிற்காக உலகம்…

உலகப்புகழ் பெற்ற கேன் திரைப்பட விழா( cannes-ஐ கேன் என்றே உச்சரிக்க வேண்டுமாம்) பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன் நகரத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் இந்த விழாவிற்காக உலகம் முழுக்க உள்ள சினிமா கலைஞர்கள் தங்களின் படைப்புகளை அனுப்புவது வாடிக்கை. அதில் சிறந்த படம், குறும்படம் ஆகியவற்றை தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் உயரிய விருதான golden palm-ஐ ஒரு திரைப்படம் வாங்கிவிட்டால் அப்படம் உலகம் முழுவதும் புகழ்பெற்றுவிடும். இதைத்தாண்டி, சிறந்த இயக்குநர், நடிகர்,சிறந்த திரைக்கதை ஆகிய category-களிலும் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது. குறும்படம் என்றால் 15 நிமிடங்களுக்கு மிகாமலும், முழுநீள திரைப்படம் என்றால் 60 நிமிடங்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

கடந்த 2019ம் ஆண்டுக்கான அகாடமியின் விருது வழங்கும் விழாவில் தென் கொரியா படமான parasite(பாராசைட்) 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிச்சென்றதை பெரும்பாலானோர் அறிந்திருப்போம். ஆஸ்கருக்கு முன்பே கேன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அந்த ஆண்டுக்கான golden palm விருதை அத்திரைப்படம் வென்றிருந்தது. cannes film festival வரலாற்றில் ஒரு கொரியன் திரைப்படம் golden palm வருது வாங்கியது அதுவே முதன் முறை. அதன் பிறகுதான் அப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு உலகம் முழுவதும் வெறித்தனமாக பரவியது.

அகாடமியின் ஆஸ்கர் விருதை காட்டிலும் கேன் திரைப்பட விழாவில் வழங்கப்படும் golden palm விருதே அதிக கவுரவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு படம் மக்களின் மத்தியில் எவ்வளவு பிரபலமடைந்துள்ளது, படத்தின் வசூல் உள்ளிட்டவைகளோடு பல்வேறு லாபிக்களையும் கடந்து தான் ஆஸ்கர் விருது வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் golden palm விருது அப்படியல்ல எனவும் படத்தின் தரத்தை வைத்து மட்டுமே விருதுகள் வழங்கப்படுவதாகவும் சினிமா வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மேலும், இது திரைப்பட விழா என்பதால் விருதுகள் வழங்குவது மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருந்து அனுப்பப்படும் திரைப்படங்கள், குறும்படங்கள், documentry-கள் ஆகியவைகளும் படைப்பாளிகளிடம் குறிப்பிட்ட கட்டணத்தை பெற்றுக்கொண்டு திரையிடப்படுகிறது. இத்திருவிழா தொடங்கும் முன்பே குறிப்பிட்ட தேதித்துக்குள் நம்முடைய படைப்படை அணுப்ப வேண்டும் என்பது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள திரைத்துறை கலைஞர்களில் இருந்து 8 பேரை ஜூரிக்களாக அமர்த்தி அவர்களின் மூலம் படங்களை தேர்வு செய்து விருதுகளை வழங்குகிறது.

விருதகளை தாண்டி இத்திரைப்பட விழாவில் தங்களுது படைப்புகள் திரையிடப்பட வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான கலைஞர்களிடம் உண்டு. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு திரைப்பிரபலங்கள் இத்திரைப்பட விழாவிற்கு அழைக்கப்பட்டு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இந்தியா சார்பாக இவ்விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன், தீபிகா படுகோன், ஏ.ஆர்.ரஹ்மான் பா.ரஞ்சித், மாதவன், அக்‌ஷய்குமார், நவாசுதின் சித்திக், தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் வரவேற்கப்பட்டனர்.

கலைஞர்கள் மட்டுமல்லாது பார்வையாளர்களாகவும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி இவ்விழாவில் பங்கேற்றுக்கொள்ளலாம். மே 17ம் தேதி தொடங்கிய இந்த 75வது கேன் திரைப்பட விழா மே-28ம் தேதி வரை நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.