பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து 7 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் ஸ்வாட் நகரம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. மேலும் அங்குள்ள ஆற்றில் படகு சவாரி மேற்கொள்வதற்காக தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று 10 சுற்றுலா பயணிகள் அங்கு படகு சவாரி மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென அந்தப் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், படகில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்மாயமான சுற்றுலா பயணிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அந்தப் பகுதியில் படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.