மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இன்று நாடியா, கிழக்கு பர்தமான்,…

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இன்று நாடியா, கிழக்கு பர்தமான், உத்தர் தினாஜ்பூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த 43 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இத்தேர்தலின் போது வன்முறைகள் ஏதும் நிகழா வண்ணம், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவை தவிர பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 37 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 23,பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 12 பேரும் போட்டியிடுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.