முக்கியச் செய்திகள் இந்தியா

மமதாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்!

மேற்கு வங்கத்தில் மீதம் உள்ள மூன்று கட்டத் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்டங்களுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் மீதம் உள்ள மூன்று கட்டத் தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் மம்தாவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்துள்ளது. தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து முடித்து விட்டதால் அதில் மாற்றங்களை செய்வது கடினம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆறாவது கட்டதேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 7ஆவது கட்டத்தேர்தல் வரும் 26ஆம் தேதியும், இறுதி கட்டத் தேர்தல் வரும் 29ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட்டு கருத்து கேட்க வேண்டும் – அன்புமணி

EZHILARASAN D

”முதலமைச்சருக்கு சாட்டர்டே, சண்டே எல்லாம் கிடையாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar

பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு-சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு

Web Editor