லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் “கூலி” – டைட்டிலை வெளியிட்டது படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படத்திற்கு ‘கூலி’ என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படத்திற்கு ‘கூலி’ என பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : விருதுநகர் தொகுதி காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

ரஜினியின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது.  ரசிகர்களிடம் அந்த போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘தாதா’ வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.

இந்நிலையில், திரைப்படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் மற்றும் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியது. இதைதொடர்ந்து திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் திரைப்படத்தின் பெயரை படக்குழு  வெளியிடவுள்ளனர்.

https://twitter.com/Dir_Lokesh/status/1782386487256109493

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் இந்த திரைப்படத்தின் D.I.S.C.O என்ற தலைப்பில் போஸ்ட்ரை வெளியிட்டார். இந்த திரைப்படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்த நிலையில், தற்போது திரைப்படத்தின்  டைட்டில் ரிவீல் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.  அந்த வீடியோவில் திரைப்படத்தின் பெயர் ‘கூலி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.