69வது தேசிய திரைப்பட விருதுகள்… சிறந்த படத்துக்கான விருது யாருக்கு..?

இந்திய அரசால் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு…

இந்திய அரசால் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.

2021-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான விருது இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. அதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் தனுஷ் நடித்த கர்ணன், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, சூர்யா மற்றும் மணிகண்டன் நடித்த ஜெய் பீம், சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம், சிம்பு நடித்த மாநாடு ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக ஜெய் பீம், கர்ணன் மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய திரைப்படங்கள் இந்த திரைவிருதை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு திரையுலகை பொறுத்தவரையில் ‘புஷ்பா’ படம் போட்டியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் பெரிய அளவிலான போட்டிகள் இல்லை எனவும், ‘சூர்யவன்ஷி, 83’, ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே அந்த ஆண்டு வசூல் ரீதியாக ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகத்திற்கு இந்த ஆண்டு கூடுதல் விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக நடிகர்கள் சூர்யா, தனுஷ், ஆர்யா, மணிகண்டன் ஆகியோர்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இயக்குனர்களில் ஞானவேல், மாரி செல்வராஜ் ஆகியோரில் ஒருவருக்கு விருது கிடைக்கலாம். மேலும் இசையமைப்பாளர்களில் அனிருத்திற்கு விருது கிடைக்கலாம் என கணிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.