68 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புகூடு; ஆர்வமாக ரசிக்கும் மக்கள்

சிங்கப்பூரில் 68 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு ஏலத்திற்கு செல்லும் முன், அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். குழந்தைகளை பயமுறுத்த நாம் அவர்களின் சிறுவயதில் டைனோசர்கள்…

சிங்கப்பூரில் 68 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு ஏலத்திற்கு செல்லும் முன், அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

குழந்தைகளை பயமுறுத்த நாம் அவர்களின் சிறுவயதில் டைனோசர்கள் கதை சொல்வது வழக்கமான ஒன்றாகும். டைனோசர்களின் கதை சொல்லும் ஜூராஷிக் பார்க் என்னும் திரைப்படம் குழந்தைகளிடம் அமோக வரவேற்பை பெற்றது.

சிங்கப்பூரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் ஆசியாவிலேயே பெரிய அளவிலான எடை கொண்ட டைனோசரின் எலும்புக்கூடு மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு “ஷென் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.
இந்த டைனோசர் 12.2 மீட்டர் நீளமும், 4.6 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் எரட 1400 கிலோவாகும். இது 66-68 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் என்று கூறப்படுகிறது.

‘ஷென்’ என அழைக்கப்படும் இந்த எலும்புக்கூடு அக்டோபர் 28 முதல் 30ஆம் தேதி வரை விக்டோரியா அரங்கில் காட்சியில் இருக்கும். அடுத்த மாதம் ஹாங்காங்கில் அது ஏலத்தில் விடப்படும். 2020ல் அமெரிக்காவின் மொண்டானா மாநிலத்தில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த டைனோசரை ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்வையிட்டனர். இது மக்கள் வெகுவாக ஈர்த்தது. இந்த டைனோசருடம் ஏராளமான மக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து பார்வையிட வந்த ஒரு பெரியவர் கூறுகையில், குழந்தைகளுக்கு டைனோசர் மற்றும் டைனோசர் கதைகள் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இந்த அருங்காட்சியகத்திற்கு அழைத்து வந்தால் அவர்களுக்கு மிவும் பிடித்தமான டைனோசரை காண்பிக்க முடிந்தது. உண்மையான விஷயத்தை பார்க்க அவர்களை அழைத்து வருவது ஒரு நல்ல அனுபவம் என்று கூறினார்.

டைனோசர் ஆர்வலர் ரிச்சர்ட் சான் என்பவர் கூறுகையில், எனது குழந்தைப் பருவத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறது. நான் நிறைய ஜுராசிக் பார்க் டி-ரெக்ஸ் சிலைகளை சேகரிக்கிறேன். உண்மையான ஒன்றைப் பார்க்க மிகவும் அருமையாக இருக்கிறது என்று சான் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.