டெல்லியிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது.
டெல்லியிலிருந்து பெங்களுருக்கு இண்டிகோ விமானம் 184 பயணிகளுடன் நள்ளிரவு புறப்பட்டது. விமானம் ஓடுபோதையில் சென்றுக் கொண்டிருந்த போது என்ஜினில் முதலில் தீப்பொறி உருவான நிலையில் சிறிது நேரதத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
டெல்லியிலிருந்து பயணிகளுடன் வானில் பறந்த விமானத்தில் தீ விபத்து நேரிட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்திருந்து பெங்களூருக்கு நேற்றிரவு புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானத்தில், ஒருபக்க இறக்கையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்கினார்.
தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் முழுஅவசர நிலை அறிவிக்கப்பட்டது. விமானத்திலிருந்த பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்ட ஊழியர்கள், விமானத்தில் தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.







