கனியாமூர் கலவர வழக்கில் 64 கல்லூரி மாணவர்களை மரக்கன்று நடுமாறு உத்தரவிட்ட நீதிபதி

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 64 கல்லூரி மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமினை வழங்கிய விழுப்புரம் மாவட்ட தலைமை முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா…

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் பள்ளியில் ஏற்பட்ட
கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 64 கல்லூரி மாணவர்களுக்கு நிபந்தனை
ஜாமினை வழங்கிய விழுப்புரம் மாவட்ட தலைமை முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா 10
மரக் கன்றுகளை நடவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளி
மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

மாணவி மரணம் தொடர்பாக நீதி கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் கல்வரமாக மாறி தனியார் பள்ளி பேருந்துகள் கட்டிடங்கள் தீ வைத்து எரித்து
சேதப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 322 பேரில் விழுப்புரம்
நீதிமன்றத்தில் 296 பேரின் ஜாமின் மனு மீதான வழக்கு விசாரனை விழுப்புரம்
மாவட்ட முதன்மை அமர்பு நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது.

இவ்வழக்கினை விசாரித்த மாவட்ட தலைமை முதனமை அமர்வு நீதிபதி பூர்ணிமா, கல்லூரி படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக 64 பேருக்கு ஜாமின் வழங்கியும் 45 பேரின் மீதான ஜாமினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் 174 பேரின் ஜாமின் மனு மீதான
விசாரனை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

நாளைய தினம் மீதமுள்ள 174 பேரின் ஜாமின் மனு மீதான விசாரனை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. மேலும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 64 பேரும் தனித்தனியாக 10 ஆயிரத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏதேனும் ஒன்றில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்று கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் செலுத்த வேண்டும் எனவும் 64 பேரும் அவரவர் உள்ளூர் முகவரியில் உள்ள பிராந்திய நிலையில் வரக்கூடிய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விடுமுறை நாட்கள் உள்பட மறு உத்தரவு வரும் வரை தினந்தோறும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் என இரு வேளையும் நேரில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என உத்தரவிட்டார்.

நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து மறு உத்தரவு வரும் வரை அவரவர் விரும்பும் பள்ளி- கல்லூரிகளில் 10 மரக்கன்றுகளை நட்டு அதனை புகைப்படமாக எடுத்து பிராந்திய எல்லையில் வரக்கூடிய குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் சமர்பிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை விதித்து மாவட்ட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.