ஓமலுார் உட்பட பல்வேறு பகுதிகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 60 ஊழியர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதில் பல்வேறு கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றது தெரியவந்தது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ஒரு பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது. விற்பனை செய்த 60 ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கபட்டது.
மொத்தமாக சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. அதே போல் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ, சந்து கடைகளுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.







