முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பானது 51.81 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிமாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் மாநில அரசிடமிருந்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்த அளவில் இதுவரை 8,56 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 8.40 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 12,530 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.