ஜூலை 22-ல் கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53 வது கூட்டம் ஜூலை 23 ல் கூடுகிறது.

காவிரி நீர் பங்கீட்டை நிர்வகிக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த 2 அமைப்புகளும் மாதம்தோறும் கூடி காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கின்றன.

காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் இதுவரை 52 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கடைசி கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி கூடியது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53 வது கூட்டம் வரும் வரும் 22ம் தேதி கூடுகிறது. மதியம் 2.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டம் டெல்லி பிக்காஜிகாமா ப்ளேஸ் பகுதியில் அமைந்துள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

53rd meeting of the Cauvery Management Authority to be held on July 23…!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.