ஆந்திரப் பிரதேச மாநிலம், அச்சுதாபுரத்தில் இயங்கி வரும் நிறுவனத்தில் வாயு கசிவு ஏற்பட்டதால் தொழிலாளர்களில் 50 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் அனகபள்ளி கூறியதாவது:
பிராண்டிக்ஸ் நிறுவன வளாகத்தில் வாயு கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, வாந்தி -மயக்கத்தை உணர்ந்த பெண் ஊழியர்கள் நிறுவன வளாகத்தை விட்டு உடனடியாக வெளியேறினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனினும், அவர்களால் சரியாக நடக்கக் கூட முடியவில்லை. 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அனகபள்ளி தெரிவித்தார்.
இதுதொடர்பாக விசாரிக்க இணைக் குழுவை ஆந்திரப் பிரதேச அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் மாதம் விசாகபட்டினத்தின் அச்சுதாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது. இதில், 178 பெண் ஊழியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.