சத்தீஸ்கரின் பீஜாப்பூர் மாவட்டத்தில் துணை ராணுவப்படைனர் மீது மவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கடனூரிலிருந்து கன்ஹர்கானை நோக்கி 27 துணை ராணுவப்படை வீரர்களுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பிஜாப்பூர் எல்லையில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் பேருந்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து துணை ராணுவ படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி, மாவோயிஸ்ட்டுகளுடன் ஏற்பட்ட சண்டையில், 5 துணை ராணுவ படையினர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.