முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

இந்தியாவில் வரும் 5ம் தேதி வெளியாகும் சாம்சங் கேலக்சி F12 சிறப்பம்சங்கள் இதுதான்!

இந்தியாவில் வரும் 5ம் தேதி சாம்சங் கேலக்சி F12 ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.

சாம்சங் கேலக்சி F12 மொபைல்போன் வரும் 5ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் சந்தைக்கு வருவதற்கு முன்பாக இதன் சிறப்பம்சங்கள் பெஞ்ச்மார்க் தளமான கீக்பெஞ்ச்சில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், ஃபிளிப்கார்ட்டிலும் இந்த மொபைல் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த மொபைல் சந்தையில் அறிமுகமான உடனே ஃபிளிப்கார்ட்டில் வாங்க முடியும் என்பது தெரிகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி F12 ஸ்மார்ட்போனானது கீக்பெஞ்ச்சில் மாடல் எண் எஸ்.எம்-G127G என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனானது அண்ட்ராய்டு 11 இல் இயங்கும் எனவும் இதில், 4 ஜிபி ரேம், எக்ஸினோஸ் 850 SoC புராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரிகிறது.

ஃபிளிப்கார்ட் தனது தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த மொபைலானது 6,000 MAH பேட்டரி மற்றும் 90Hz டிஸ்ப்லே அமைப்பை கொண்டுள்ளது. அத்துடன் 48 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதில் சார்ஜிங்க்காக USB Type-C போர்ட் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக்கைக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி ஒத்தி வைப்பு

EZHILARASAN D

மாண்டஸ் புயல் எச்சரிக்கை; 27 விமான சேவை ரத்து

G SaravanaKumar

”தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Web Editor