4-ம் ஆண்டில் ஆட்சி: கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டு நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 2021 ஆம் ஆண்டில்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டு நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

2021 ஆம் ஆண்டில் மே 7 ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில்  மூன்றாண்டுகளில் திமுக ஆட்சி செய்த சாதனைகள் மற்றும் திட்டங்களின் மூலம் பலனடைந்தவர்களின் பேட்டிகளை  ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் இது சொல் ஆட்சியல்ல செயல் ஆட்சி என்று குறிப்பிட்டுள்ளார். நான் முதல்வன் திட்டம், கட்டணம் இல்லாத பேருந்து பயணம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதில் பயன் பெற்றவர்கள் பேட்டிகள் இடம்பிடித்துள்ளன. நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்றார். ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டு நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.