இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து அக்.7-ஆம் தேதி, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. .இந்தப் போட்டியில் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அக்.9 -ஆம் தேதி 2-வது டி20 போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக விளையாடி 249 ரன்கள் எடுத்தும் தோல்வியை தழுவியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டி20 போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் அக்.11-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-அவது டி20 போட்டி ஹைதரபாத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இன்றைய ஆட்டத்தி இந்திய அணி வெற்றிபெற்று வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் . அதேபோல் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
உத்தேசப் பட்டியல்
இந்தியா : சஞ்சு சாம்சன் (wk), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (c), திலக் வர்மா, நமன் திர், நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்
வெஸ்ட் இண்டீஸ் : ஷாய் ஹோப் (c & wk), கமில் பூரன், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், குவென்டின் சாம்ப்சன், கீமோ பால், ஷமர் ஸ்பிரிங்கர், ரோஸ்டன் சேஸ், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி




