தமிழ்நாட்டில் 46 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன-அமைச்சர்

ஆதர்ஷ் நிலையத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 46 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள ரயில் நிலையங்களை அழகுப் படுத்துதல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக மக்களவையில்…

ஆதர்ஷ் நிலையத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 46 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள ரயில் நிலையங்களை அழகுப் படுத்துதல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்துவது மற்றும் நவீனப்படுத்துவது போன்றவற்றை வழக்கமான பணிகளாக ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என்றும்,

இருப்பினும் “ஆதர்ஷ் நிலையத் திட்டத்தின்” கீழ் நாடு முழுவதும் 1,253 ரயில் நிலையங்கள் மேம்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இதில் 1,212 ரயில் நிலைய பணிகள் திட்டமிட்டபடி முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 41 ரயில் நிலையங்களில் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அரக்கோணம், அரியலூர், ஆவடி, சென்னை கடற்கரை,சேத்துப்பட்டு,சேனை பார்க், குரோம்பேட்டை, கோயம்புத்தூர், ஓசூர், கடையநல்லூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, காட்பாடி, கொருக்குப்பேட்டை, கூடல்நகர், கும்பகோணம், மணவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகூர், பாம்பன், பீளமேடு, பெரம்பூர் கேர்ஜ் ஒர்க்,புதுக்கோட்டை,ராஜபாளையம்,ராயபுரம்,சேலம், சங்கரன்கோவில், செஞ்சிப்பானபக்கம் ( ஹால்ட் ) , ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், புனித தோமையார் மலை, தாம்பரம், தேனி, தென்காசி, திருப்பரங்குன்றம், திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, திருமங்கலம், திருநின்றவூர், திருவாலங்காடு, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, வேலூர் கண்டோண்மண்ட், விருத்தாசலம் உள்ளிட்ட 46 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பணிகள் குறித்த நேரத்தில் நிறைவடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.