கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 16 நாட்களுக்க பின்னர் மீண்டும் வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை(பிப்.3) திறக்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றின் மூன்றுாவது அலை வீரியமாக இருந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டிலும் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்தது.
இதனையடுத்து, பல கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் விதித்தன.
இதன் தொடர்ச்சியாக ஜன.17ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், 31.01.2022 அன்று நிலைமையை மதிப்பாய்வு செய்து, அதற்கேற்ப முடிவு எடுத்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் கொரோனா தொற்று நேற்று 16,000ஆக குறைந்தது. இதனையடுத்து பல கட்டுப்பாடுகளை மாநில அரசு தளர்த்தியது. இரவு நேர ஊரடங்கு மற்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை விலக்கி உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக நாளை (பிப்.3) முதல் உயிரியல் பூங்கா திறக்கப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே போல பூங்காவுக்கு வருபவர்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








