தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிப்பதற்காகப் பறக்கும் படையினர் களத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னையில் மட்டும் 45 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில், ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களில் மட்டும், உரிய உரிமம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.31 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதே போல ரொக்கப்பனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த ஆறு நாட்களில் ரூ.5,00810 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணம் இல்லாத 54 மடிக்கணினிகள், 44 கைப்பேசிகள், வெளிநாட்டு சிகரெட் என ரூ.1.26 கோடி இரண்டாயிரம் மதிப்புள்ள பொருள்களையும் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் , தனிநபர் ஒருவர் ரூ.50,000க்கும் மேல் எடுத்துச் செல்லக் கூடாது. ரூ.10,000க்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் , பறக்கும் படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.







