ஹாங்காங்கில் சூறாவளியால் 450 விமானங்கள் ரத்து – பாதுகாப்பு முகாம்களில் 8 லட்சம் பேர் தங்க வைப்பு..!

ஹாங்காங்கில் சூறாவளியால் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு முகாம்களில் 8 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹாங்காங்கில் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி…

ஹாங்காங்கில் சூறாவளியால் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு முகாம்களில் 8 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹாங்காங்கில் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி மையம் கொண்டது. மேலும் இந்தப் புயல் நேற்று காலை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன்படி இந்த சூறாவளிக் காற்று  மத்திய குவாங்டாங் அருகே மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல கூடும் என சீன தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.  இதனால் சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் சூழலும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வாங்டாங் மாகாணத்தில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் காரணமாக 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் ஹாங்காங்கில் பள்ளிகள் திறப்பும் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. பங்கு சந்தைகளின் வர்த்தகமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. சூறாவளி எதிரொலியாக, ரெயில் போக்குவரத்து சேவையும்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.