செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையைடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இதன் தொடக்க சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்தார்.
கடந்த 12 நாட்களாக நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதன் நிறைவு விழா சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
44 வது செஸ் ஒலிம்பியாட் பரிசு விவரம்
1. ஓபன் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு தங்கப்பதக்கம் மற்றும் ஹேமில்டன் ரஷல் கோப்பை ( Hamilton Russel Cup) வழங்கப்படும் அணியில் இடம் பிடித்துள்ள ஐந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளரான கேப்டனுக்கும் பதக்கம் வழங்கப்படும்.
2. ஓபன் பிரிவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கப்படும்.
3. மகளிர் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு தங்கப்பதக்கம் மற்றும் வேரா மேன்ஷிக் கோப்பை (Vera Manchik Cup) வழங்கப்படும்.
4. மகளிர் பிரிவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கப்படும்.
5. தனிநபர் பதக்கம், மொத்தம் ஐந்து பிரிவில் வழங்கப்படும். ஓபன் பிரிவு – மகளிர் பிரிவு இரண்டிலும் முதல் போர்டில் விளையாடும் வீரர்களில் யார் அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளார்களோ அவர்களுக்கு தங்கம், இரண்டாவது இடத்திற்கு வெள்ளி, மூன்றாவது இடத்திற்கு வெண்கல பதக்கங்கள் கொடுக்கப்படும்.
6. இதே போல் இரண்டாவது போர்ட், மூன்றாவது போர்ட், நான்காவது போர்ட், ரிசர்வ் போர்ட் ஆகிய ஐந்து பிரிவுகளில் சாம்பியன்களுக்கு பதக்கம் வழங்கப்படும்.
7. இது தவிற ஒவ்வொரு நாடுகளின் ஓபன், மகளிர் என இரண்டு பிரிவுகளையும் ஒன்று சேர்த்து அதில் எந்த அணி சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள் என கணக்கிட்டு அந்த அணிக்கு நோனா கேப்ரிந்தஷ்விலி கோப்பை ( Nona Gaprindarshvili Trophy) வழங்கப்படும்.







