தமிழகத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் மக்கள் பொது இடங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 247 ஆண்கள், 187 பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 85 பேர், கோவையில் 59 பேர், செங்கல்பட்டில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிப்பு இல்லை, அவற்றை தவிற அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மருத்துவமனையில் 381 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 896 பேர் சிகிச்சையில் உள்ளனர்.








