முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

40 அடி உயர மெட்ரோ தூண் இடிந்து விபத்து: உடல் நசுங்கி தாய், மகன் உயிரிழந்த பரிதாபம்!

பெங்களூருவில் மெட்ரோ ரயிலுக்காக கட்டப்பட்டு வந்த தூண் திடீரென இடிந்து, சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரண்டரை வயது மகன் மீது விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுளள்து.

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் தற்போது மெட்ரோ ரயிலுக்கான கட்டுமானப் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு கல்யாண் நகரிலிருந்து எச்ஆர்பிஆர் பகுதிவரை மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் இடைப்பட்ட பகுதியான நாகவரா என்ற இடத்தில் கட்டப்பட்டு வந்த உலோக கம்பிகளால் ஆன, 40 அடி நீளம் கொண்ட மெட்ரோ ரயில் தூண் திடீரென இன்று காலை 11 மணியளவில் சாலையில் இடிந்து விழுந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது அந்த வழியாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் வர, அந்த தூண் அவர்கள் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர்கள் நான்கு பேரையும் , அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், மேல் சிகிச்சைக்காக மீண்டும் அவர்கள் நால்வரும் அல்டியஸ் என்ற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் தேஜஸ்வி, அவரது இரண்டரை வயது மகன் விஹான் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தேஜஸ்வியின் மற்றும் மகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விபத்து குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பெங்களூரு கிழக்கு காவல் துணை ஆணையர் டாக்டர் பீமாசங்கர் எஸ் குலேட், இறந்த தேஜஸ்வியினியின் கணவர் லோஹித் பைக்கை ஓட்டி வந்ததாகவும், தேஜஸ்வினி மற்றும் அவரது மகன் இருவரும் பின்னால் அமர்ந்திருந்ததாகவும், கணவன் , மனைவி இருவருமே ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தூண் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய விபத்து நடந்த இடத்திற்கு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனையடுத்து விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி அளித்துள்ளார். தார்வாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது குறித்து எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது. விரைந்து விசாரணை நடத்தி, தூண் இடிந்து விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ₹ 20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது .தூண் இடிந்து விழுந்த பகுதியில் ஏற்பட்டிருந்த கடும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்து, சாலையில் கிடந்த இடிபாடுகளை அகற்றி சரிசெய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”வேதனைக்கு உள்ளாக்காதீர்கள்”- ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

Jayapriya

Ind vs Aus முதல் ஒருநாள் போட்டியை நேரில் ரசிக்கும் ரஜினிகாந்த்

Web Editor

மாண்டஸ் புயல்; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

G SaravanaKumar