4 ஆண்டு பகுதி நேர பொறியியல் படிப்பு: இன்று முதல்  விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் 2023 – 2024 கல்வி ஆண்டிற்கான 4 ஆண்டுகள் பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு…

டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் 2023 – 2024 கல்வி ஆண்டிற்கான 4 ஆண்டுகள் பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளதாவது : “தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள், 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 ஆண்டு பகுதிநேர பொறியியல் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இதனை பயில விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://www.ptbe-tnea.com என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிப்பவர்கள் சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று டிப்ளமோ படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து வருபவர் அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவராக  இருக்க வேண்டும். இன்று முதல் வரும் ஜூலை 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த கல்வியாண்டில் 4 ஆண்டுகள் பகுதிநேர பி.இ. பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.இந்த கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ. பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகளாக அதாவது 8 பருவங்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-2590080, 9486977757 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் ” என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.