அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற பூந்தமல்லி எம்.எல்.ஏ மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் பாடம் எடுத்தார்.
பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் மூன்று ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 3 ஊராட்சிகளுக்கு டிராக்டர்களை வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தங்களுக்கு வழங்கப்பட்ட டிராக்டர்கள் எப்படி உள்ளது என்பதை ஓட்டி பார்த்து வாங்கி
சென்றனர்.
பின்னர் எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி நசரத்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வகுப்பறைக்குள் சென்று மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் பாடம் எடுத்தார். மேலும், மாணவி ஒருவரை ஆங்கிலத்தில் பேச வைத்து அசத்தினார்.
பின்னர் ஒன்றாம் வகுப்பில் உள்ள ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக்கு சென்ற எம்.எல்.ஏ உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் மாணவர்களாக மாறி சேரில் அமர்ந்து ஆசிரியர் நடத்திய பாடங்களை கவனித்தனர். பின்னர் சிறு பிள்ளைகளுக்கு தமிழில் பாடல் பாட வைத்து அசத்தினார்.
அரசு பள்ளியில் எம்.எல்.ஏ ஆய்வு செய்து மாணவர்களுக்கு பாடம் எடுத்தது வரவேற்பு பெற்றுள்ளது.
ம.ஶ்ரீ மரகதம்








