முக்கியச் செய்திகள்

இலங்கை அகதிகள் 4 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்…

இலங்கையில் இருந்து வாழ வழியின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில் இன்று தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தான முறையில் கடலில் பயணம் செய்து அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே 100க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இலங்கை தமிழர்கள் நான்கு பேர் அகதிகளாக ராமேஸ்வரத்துக்கு இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் இலங்கையில் இருந்து படகு மூலம் இராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் வந்திறங்கியுள்ளனர். இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜெயமாலினி, பதுர்ஜன், ஹம்சிகன், பதுஷிகா எனப்து தெரியவந்துள்ளது. இவர்கள் 2006 முதல் 2019 வரை மண்டபம் முகாமில் பதிவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் அந்த 4 பேரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியரசு தலைவர் தேர்தல்; திரௌபதி முர்மு முன்னிலை

G SaravanaKumar

வாலிபர் கொலை? : தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை

EZHILARASAN D

டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மீது காவல் நிலையத்தில் புகார்

G SaravanaKumar