சச்சின் டெண்டுல்கர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையையொட்டி சிறப்பு பதிவுகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிமித்திருந்தன. சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே உள்ளார். தொடர்ந்து, தன்னுடைய ரசிகர்களுக்கு பர்ஷனல் மற்றும் கிரிக்கெட் தொடர்பான அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக வழங்கி வருகிறார்.
இந்நிலையில், ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, இந்திய பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் இன்ஸ்டாகிராமில் தனது சகோதரி சவிதா மற்றும் சகோதரர்கள் நிதின் மற்றும் அஜித் ஆகியோருடன் உள்ள ஒரு மனதைக் கவரும் படத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும், தனது சகோதரி குறித்த சிறப்பு பதிவையும் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், முதல் கிரிக்கெட் பேட்டை அவரது தங்கை பரிசளித்துள்ளதாகவும், என்னுடைய சகோதரி எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட் என்றும் பதிவிட்டுள்ளார். டெண்டுல்கர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், அவரும் அவரது உடன்பிறப்புகளும் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர்.
புனேவில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சச்சின் டெண்டுல்கர் நேற்று பேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
-ம.பவித்ரா








