சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அருகே உள்ள விவசாய தெருவில் வீடு ஒன்றில் வைத்து நாட்டு பட்டாசுகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று விற்பனை செய்யும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பட்டாசு வாங்க வந்த யாசின், சுனில் உள்ளிட்ட 4 பேர் தீயில் கருகி பலியாகியுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுப்படுத்தினர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.







