4 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய 12 மீனவா்கள்!

கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது இழுவை கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட விவகாரத்தில் மாலத்தீவில் தவித்த 12 மீனவர்கள்  சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். தூத்தூர் பகுதியை சேர்ந்த பைஜு என்பவருக்கு…

கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது இழுவை கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட விவகாரத்தில் மாலத்தீவில் தவித்த 12 மீனவர்கள்  சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

தூத்தூர் பகுதியை சேர்ந்த பைஜு என்பவருக்கு சொந்தமான புனித அந்தோணியார் என்ற விசை படகில் கடந்த 7-ந் தேதி குமரி-7, கேரளா-2, புதுச்சேரி-2,அசாம் -1 பகுதிகளை சேர்ந்த 12 மீனவர்கள் தேங்காப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் அனைவரும் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருந்த போது தூத்துக்குடி பகுதியில் இருந்து மாலத்தீவிற்கு சென்ற இழுவை கப்பல், விசைப்படகு மீது மோதியது. இதில் விசைப்படகு மூழ்கிய நிலையில் 12 மீனவர்களும் காயங்களுடன் மாலத்தீவு கடற்படையினர் மீட்டு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், மாலத்தீவில் தவித்து வந்த 12 மீனவர்களும் 4 நாட்களுக்குப் பிறகு மத்திய மாநில மற்றும் மாலத்தீவு வாழ் தமிழர்கள் முயற்சியால் சொந்த ஊர் வந்து சேர்ந்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.