சா்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தனர் 4 விண்வெளி வீரா்கள்

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அனுப்பிய 4  விண்வெளி வீரர்கள் சா்வதேச விண்வெளி நிலையத்தைத் சென்றடைந்தனர். ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரல் நகரில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன்…

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அனுப்பிய 4  விண்வெளி வீரர்கள் சா்வதேச விண்வெளி நிலையத்தைத் சென்றடைந்தனர்.
ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரல் நகரில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் ராக்கெட் மூலம் வியாழக்கிழமை அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சா்வதேச விண்வெளி நிலையத்தின் ஹார்மெனி தொகுதியுடன் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது. நாசாவின் கமாண்டர் ஸ்டீஃபன் போவன்,  வாரன் ஹோபா்க், ரஷியாவைச் சோ்ந்த ஆண்ட்ரே ஃபெத்யேவ், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்-நெயாடி ஆகியோா் அந்த விண்கலத்தில் இருந்தனர்.

 

இதையும் படிக்க: துபாய் ATP டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஆண்ட்ரே ரூப்லெவ்

அங்கு ஏற்கெனவே தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வந்த அமெரிக்காவின் ஃபிராங்க் ரூபியோ, ரஷியாவின் சொ்கேய் ப்ரோகோபியேவ் மற்றும் டிமித்ரி பீட்டலின் ஆகிய மூவருக்கு பதிலாக இவா்கள் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். அந்த மூவரையும் பூமிக்கு அழைத்து வர சோயுஸ்-எம்எஸ்23 விண்கலம் கடந்த வாரம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், சா்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை தொடா்ந்து மேற்கொள்வதற்காக 4 வீரா்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தற்போது அனுப்பியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.