துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 158 கிராம் தங்கத்தை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரியான முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ரமீஸ் ராஜா, சதாம் உசேன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.
https://twitter.com/ChennaiCustoms/status/1601555030183530496
அதில் துணிகளுக்கு நடுவே தங்கத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். 2 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 158 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து இந்த கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







