இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: 131 ரன்களில் ரோகித் சர்மா அவுட்!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில்,  இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில்,  மார்க் வுட் பந்தில் அவுட்டானார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட…

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில்,  இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில்,  மார்க் வுட் பந்தில் அவுட்டானார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.  இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.  இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, இரு அணிகளும் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ்க் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து விளாசி வருகிறார்.

ஜெய்ஸ்வால் மார்க் வுட் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த ஷுப்மன் கில் டக் அவுட்டானார். பின்னர் ஜடேஜா களமிறங்கி ரோஹித்துடன் விளையாடி வருகிறார். இந்நிலையில், 131 ரன்களில் ரோகித் சர்மா மார்க் வுட் பந்தில் அவுட்டானார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.