3-வது டி20 போட்டி : இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி!

இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது டி20 போட்டி நாட்டிங்கம்மில் உள்ள டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில் 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர்கள் சால்ட் 44 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் தொடங்கியது. ஆனால் 11.4 ஓவர்களில் இந்திய அணி 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர்கள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்ற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.