இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள், 5 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 2 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஷிகர் தவன் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.
மூன்றாவது ஒரு நாள் ஆட்டம், இன்று தொடங்கியது. டிரினிடட்டில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை இந்திய அணி தேர்வு செய்தது.
கேப்டன் ஷிகர் தவனும், சுபமன் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஷிகர் தவன் அரை சதம் பதிவு செய்தார். அவர் 58 ரன்கள் எடுத்திருந்தபோது பூரனிடம் கேட்ச் ஆகி அவர் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஸ்ரேயஸ் ஐயர் களம் இறங்கினார். சுபமன் கில் அரை சதம் பதிவு செய்து 51 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஸ்ரேயல் ஐயர் 2 ரன்கள் எடுத்துள்ளார். 24 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், 1 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 115 ரன்கள் எடுத்துள்ளது.
மழை பெய்து வருவதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.








