நான் கலைஞர் வழியில் வந்தவன், என்னை யாரும் அசைக்க முடியாது என கூட்டுறவுத்தறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட்டிற்கு தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கியது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, எனக்கு எந்த பயனும் இல்லை. என் மடியில் எந்த கணமும் இல்லை. நான் கலைஞர் வழியில் வந்தவன், என்னை அசைத்து பார்க்க முடியாது என்று கூறினார்.
மேலும், 2008ல் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்திற்கு தற்பொழுது விசாரணைக்கு அழைத்துள்ளனர். 14 ஆண்டுகள் கழித்து உறுதியான எண்ணத்தோடு சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறோம் நேர்மையான இருக்கிறேன் என்றார்.
சென்னையில் எனக்கு ஒரு சதுர அடி நிலம் கூட கிடையாது. சட்ட விரோதமான எந்த நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை. அமலாக்கத் துறையினர் விசாரணை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் உறுதியான இருக்கிறேன். நிச்சியம் நீதிமன்றத்தில் சந்திப்போம். திரும்ப எப்பொழுது விசாரணைக்கு அழைப்பார்கள் என்று தற்போது கூற முடியாது