தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று மாற்றப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் இறையன்பு அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை இணைச் செயலாளராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில மனித உரிமை ஆணைய செயலாளராக விஜயகார்த்திகேயன், நில நிர்வாக கூடுதல் ஆணையராக சாந்தா, வணிக வரித் துறை இணை ஆணையராக கற்பகம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக சுந்தரவள்ளி, மீன்வளம், பால் வளத் துறை இணைச் செயலாளராக விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாக இணைச் செயலாளராக மேகராஜ் உட்பட 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். நேற்று 24 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 54 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், இன்று 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். திண்டுக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.







