365 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு; அலுவலக பார்ட்டியில் பணியாளருக்கு அடித்த ஜாக்பாட்!

சீனாவில் ஊழியர் ஒருவருக்கு சம்பளத்துடன், 365 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கு நீங்கள் வேலைக்கு வர வேண்டிய அவசியமில்லை. ஒரு நாள் கூட வர தேவை  இல்லை. ஆனால் உங்கள் சம்பளம் ஒவ்வொரு…

சீனாவில் ஊழியர் ஒருவருக்கு சம்பளத்துடன், 365 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கு நீங்கள் வேலைக்கு வர வேண்டிய அவசியமில்லை. ஒரு நாள் கூட வர தேவை  இல்லை. ஆனால் உங்கள் சம்பளம் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் என்று உங்கள் நிறுவனம் உங்களுக்குச் சொன்னால் என்ன செய்வீர்கள்? பலருக்கு, அது கனவு, ஆனால் சீனாவில் ஒரு மனிதனுக்கு, அது நனவாகியது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரில்  நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு இரவு விருந்து அளித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விருந்தில் ஊழியர் ஒருவருக்கு சம்பளத்துடன், 365 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தத்தில் விடுபடும் வகையில், நிறுவனம் ஒன்று அதிர்ஷ்ட குலுக்கல் போட்டி நடத்தியது. இதில் வென்ற ஊழியருக்கு சம்பளத்துடன் 365 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தனது ஊழியர்களுக்கு முழு ஆண்டு விடுமுறை அளிக்க நினைத்த முதல் நிறுவனம் இதுவல்ல என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2022 ஆம் ஆண்டில் இதே போன்று ஒரு ஊழியர்க்கு ஜாக்பாட்டை மற்றொரு ஷென்சென் நிறுவனம்  வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.