சட்டப்பேரவையில் இன்று(செப். 8) பொதுச் துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அந்தத் துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில், “முன்பு சட்டமன்ற நிகழ்வுகளை பார்ப்பதற்கு அனுமதி கிடைக்குமா இல்லையா என்று மக்களிடையே குழப்பம் நிலவி வரும்.
சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கும் நேரத்திலும் சட்டப்பேரவையை நேரில் காண வேண்டும், உள்ள இருக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வத்தோடு பொதுமக்கள் அதிகளவு வந்த வண்ணமே இருக்கிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முழுவதும் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரை காண 22651 பேர் வந்தாகவும், 2022 ஆம் ஆண்டு 22,150 பேர், 24 ஆம் ஆண்டு அது குறைந்து 10 ஆயிரம் பேர் தான் வந்ததாகவும் 2025-ல் 20,103 பார்வையாளர்கள் வந்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டு நடைபெற்று வரும் 28 நாள் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பள்ளி கல்லூரியைச் சார்ந்த மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் என 32,555 பார்வையாளர்கள் வந்துள்ளனர். சராசரியாக 20 பள்ளி, கல்லூரிகள் தான் வருவார்கள், ஆனால் இந்த முறை 75 பள்ளி, கல்லூரி உட்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமாக உள்ளார்கள. இதன் மூலம் இளைஞர்களிடையே பொதுவாழ்வில் உள்ள ஆர்வம் அதிகரித்து இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.




