ஹரியானாவில் விவசாய போராட்டம் நடந்த பகுதிக்கு அருகே டிப்பர் லாரி மோதியதில் மூன்று பெண் விவசாயிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். ஹரியான-டெல்லி எல்லையில் போராட்டங்களை விவசாய அமைப்புகள் தீவிரமாக நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கெரி பகுதியில் விவசாயிகள் பேரணியில் கார் புகுந்ததில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து இன்று டெல்லி-ஹரியானா எல்லையில் திக்ரி எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய பகுதிக்கு அருகில் டிப்பர் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியதில் மூன்று பெண் விவசாயிகள் பலியாகியுள்ளனர். இதில் இரண்டு பேர் சம்ப இடத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டாதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் போராட்டத்தின் அருகே சமீப நாட்களாக நடைபெற்று வரும் தொடர் வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








