ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருந்த 3 பேர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானாவின் குருகிராம் பகுதியில் இருக்கும் சிஎன்ஜி பெட்ரோல் பங்கில் வழக்கமான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் திடீரென்று மர்ம நபர்கள் அவர்களை தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் பெட்ரோல் பங்கில் இருந்த வங்கி மேலாளர், ஆபரேட்டர் மற்றும் பெட்ரோல் போடும் நபர் ஒருவர் என மூன்று பேரை சரமாறியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய காவல் துணை அணையர் வீரேந்திர விஜி, “பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மூன்றுபேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இறந்த மூன்று பேரின் உடலிலும் கத்தியால் குத்திய காயங்கள் இருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் இருந்து எந்த பணமும் கொள்ளையடிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து “இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்யும் போது பெட்ரோல் பங்கில் இருக்கும் சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அங்கு இருந்த சிசிடிவி அணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்







