இலங்கையிலிருந்து கோடியக்கரை வழியாகப் படகில் வந்து கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் உரியப் பதிவுகள் இல்லாமல் தங்கி இருந்த மூன்று பேரைக் கைது செய்து காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெத்திகுப்பம் ஊராட்சியில் கும்முடிபூண்டி வட்டாட்சியர் அலுவலகம் பின்புறமாக உள்ள இலங்கை தமிழர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள அனைத்து இலங்கை தமிழர் அகதிகளை கியூ பிரிவு போலிஎசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மூன்று வாலிபர்கள் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் புதிதாக
வந்துள்ளனர். உரிய பதிவும அவர்களிடம் இல்லை என்பதை அறிந்த கியூ பிரிவு போலீசார் 3 வாலிபரை கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இலங்கையிலிருந்து விந்துசன் துசன் (21), லிங்கேஸ்வரன் (25), சிந்துஜன் (28) ஆகியோர் படகுமூலம் புதுக்கோட்டை மாவட்டம் கோடியக்கரை பகுதிக்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலம் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் தங்கியது
தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சிந்துஜன் கும்மிடிப்பூண்டி இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் உரிய பதிவின்றி தங்கி அவர் மூலம் இலங்கையில் இருந்து படகுமூலம் தப்பி கும்முடிப்பூண்டி அகதி முகாமிலமூன்று பேருய தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.







