2வது டி20 போட்டி : ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி!

2-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு, தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் அதிரடியாக ரன்களை குவித்தனர்.

இறுதியில் இந்திய அணி 8.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தநிலையில், தற்போது 2-வது போட்டியிலும் வெற்றி பெற்றி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.