தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே கடந்த சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,535-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,280-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,570-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 40ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




