சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தின் 2வது பாடல் அக்.21-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

3டி முறையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‘கங்குவா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இதையும் படியுங்கள் :“ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் வன்மத்தை கக்குவது ஏன்?” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி!
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ‘கங்குவா’ திரைப்படத்தின் “Vamos Brincar Babe” என்ற பாடல் வருகிற 21-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







