இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி கடந்த 18ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 349 ரன்களை குவித்தது. 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடக்கத்தில் நியூசிலாந்து அணி 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் சான்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. இதன்மூலம் இந்தியா ஒரு நாள் போட்டியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி ராய்பூர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
ஏற்கனவே முன்னிலையில் இருக்கும் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி கோப்பையை வெல்லும். முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை பெறும். இந்தியா-நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து கோப்பையை கைப்பற்ற போகிறதா? என ரசிகர்கள் எதிர்ப்பார்பில் உள்ளனர்.