2வது ஒருநாள் போட்டி: இந்தியா – இலங்கை அணி இன்று முதல் வெற்றிக்கு மோதல்!

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, கொழும்புவில் இன்று (ஆக. 4) நடைபெற உள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் முதலில் விளையாடிய டி20 தொடரை…

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, கொழும்புவில் இன்று (ஆக. 4) நடைபெற உள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் முதலில் விளையாடிய டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அடுத்து, ரோகித் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதி வருகிறது. கொழும்புவில் நேற்று முன்தினம் (ஆக. 2) நடந்த முதல் போட்டி, எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் முடிந்தது.

இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்த நிலையில், அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு அரை சதம் விளாசி நல்ல தொடக்கத்தை தந்தார் ரோகித். அடுத்து வந்தவர்கள் பெரிதாகக் கை கொடுக்காவில்லை. கே.எல்.ராகுல் – அக்சர் பொறுப்புடன் விளையாடி வெற்றியை நெருங்கினர். அவர்கள் ஆட்டமிழந்தபோது, இந்தியா 40.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்திருந்தது.

அதன் பிறகு 47.3 ஓவரிலேயே 230 ரன் எடுத்து சமநிலையை எட்டினாலும், தேவையில்லாமல் அடுத்தடுத்து 2 விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டம் ‘டை’ ஆனது. இரு அணிகளும் 0-0 என சமநிலை வகிக்க, 2வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இரு அணிகளும் முதல் வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி என இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.