2வது ஒருநாள் போட்டி; இந்தியாவுக்கு 272 ரன்கள் இலக்கு

இந்தியா-வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்திய அணிக்கு 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2…

இந்தியா-வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்திய அணிக்கு 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது தொடக்க வீரர்களாக அனமுல் ஹக், லிட்டன் தாஸ் களமிறங்கினர்.

தொடக்கத்தில் அனமுல் ஹக் 11 ரன்களிலும் , லிட்டன் தாஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 21 ரன்களிலும் , ஷாகிப் அல் ஹசன் 8 ரன்களிலும்,வெளியேறினர். இதனால் வங்காளதேச அணி தடுமாறியது. அடுத்து களமிறங்கிய மகமதுல்லா ,மெஹிதி ஹசன் மிராஸ், இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடிய மகமதுல்லா அரைசதம் அடித்து 77 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிலைத்து ஆடிய மெஹிதி ஹசன் மிராஸ் சதமடித்து அசத்தினார். இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு வங்காளதேச அணி 271 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா சார்பில் வாஷிங்க்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், சிராஜ், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து 272 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.