29.2 C
Chennai
May 15, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

நூடுல்ஸ் vs கொத்து பரோட்டா : ’டக்கர்’ பட ட்ரைலரில் இடம்பெற்ற ‘நச்’ வசனம்..!!

டக்கர் படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள நூடுல்ஸ் vs கொத்து பரோட்டா வசனம் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் சித்தார்த்தின் ‘டக்கர்’ திரைப்படம் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், இதன் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ’நீரா நீரா’ பாடல் தொடர்ந்து அனைவரின் பிளேலிஸ்ட்டிலும் டிரெண்டாகி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படம் மே 26, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் க்ளிம்ப்ஸையும் ஏப்ரல் 17, 2023 அன்று படக்குழு வெளியிட்டது.

அடுத்த தலைமுறையை ஈர்க்கும் வகையில் காதல், எமோஷன் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுடனும் இளமை துள்ளலுடனும் பார்வையாளர்களை இந்த படம் கவர உள்ளது. சித்தார்த், யோகிபாபு, திவ்யான்ஷா, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் டக்கரில் நடித்துள்ளனர்

’டக்கர்’ தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.ஏ.கௌதம் (எடிட்டிங்), உதய குமார் கே (கலை இயக்கம்), தினேஷ் காசி (ஸ்டண்ட்ஸ்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் டக்கர் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.  2.09 நிமிடங்கள் வெளியாகியுள்ள இந்த ட்ரைலரில் ஆக்‌ஷன், ரொமான்ஸ், திரில்லிங், பஞ்ச் டயலாக என அனைத்து கலவையான காட்சிகள் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளன. இந்த ட்ரைலரில் இடம்பெற்றுள்ள நூடுல்ஸ் vs கொத்து பரோட்டா வசனம் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading